B.A Tamil Literature – தமிழ்த்துறை
About The Department
பழனிசாமி கலை கல்லுாரி 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லுாரியின் தமிழ்த் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அனுபவமிக்க சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்வியும் ஒழுக்கமும் இக்கல்லுாரியின் இரு கண்களாகப் போற்றப்படுகிறது.
Tamil
நோக்கு (Vision)
தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணங்கள் மூலம் வாழ்வியல் அறம் சார்ந்த ஒழுக்கங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படும் படைப்பாற்றல்களை உருவாக்குவதோடு சிறந்த ஆளுமையுள்ள மனிதர்களை வெளிக் கொணர்வதே முக்கிய நோக்கமாகும்.
Tamil
இலக்கு (Mission)
- தமிழ் மொழியின் இலக்கண இலக்கியங்களை அறிவதன் மூலம் மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல்.
- தமிழ் மொழியின் வரலாற்றினை அறிந்து அதனை அழியவிடாமல் போற்றி பாதுகாக்கும் சமூக பொறுப்பை கற்பவர்களிடம் ஏற்படுத்துதல்.
- படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் புதுக்கவிதை, மரபுக் கவிதை, ஹைக்கூ கவிதை, நாட்டுப்புற பாடல்கள் ஆகியன கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம்; சிறந்த படைப்பாளர்களை உருவாக்குதல்.
- இலக்கண இலக்கியங்களைக் கற்பதன் மூலம் வாழ்வியல் நெறிகளை அறிவதோடு அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகச் செய்தல்.
இளங்கலைத் தமிழ் இலக்கியம் (B.A. TAMIL)
- இளங்கலைத் தமிழ் இலக்கியம் மூன்று வருடங்கள் கொண்ட விரிவான பாடத் திட்டத்தைக் கொண்டுள்ளது.
- இப்பாட பிரிவில் சேர +2 தேர்ச்சிப் பெற்று இருந்தால் போதும்.
முதலாமாண்டு பாடங்கள்
- தற்கால இலக்கியம்
- உரைநடை இலக்கியம்
- தமிழ் இலக்கிய வரலாறு
- இலக்கணம் நன்னுால் எழுத்து
- கணினியும் இணையமும்
இரண்டாமாண்டு பாடங்கள்
- இலக்கணம் நன்னுால் சொல்
- பக்தி இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும்
- தமிழக வரலாறும் பண்பாடும்
- தமிழ் பயிற்றும் முறை நோக்கம்
- நாட்டுப்புறவியல்
- மொழிப்பயிற்சிகள்
- இலக்கணம் – யாப்பருங்கலக்காரிகை
மூன்றாமாண்டு பாடங்கள்
- காப்பியங்கள்
- இலக்கியத் திறனாய்வு
- பொது மொழியியல்
- இலக்கணம்
- சங்க இலக்கியம் – அகம்
- சங்க இலக்கியம் – புறம்
- தமிழ் மொழி வரலாறு
- இலக்கியம்
- மக்கள் ஊடகத் தொடர்பியல்
- ஆட்சித்தமிழ்
- மொழி பெயர்ப்பியல்
கற்றல் வெளிப்பாடு
- புதுக்கவிதையின் மூலம் வாழ்வியல் விழுமியங்களை உணர்த்துதல்.
- கவிதை உருவாக்கும் திறன் பெறுதல்.
- சமூக சிந்தனையைப் பெறுதல்.
- மொழி ஆளுமைத் திறன் பெறுதல்.
- அடித்தள மக்களின் வாழ்க்கை அனுபவத்தைப் புரிந்துகொள்ளுதல்.
- வாழ்க்கை சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனைப் பெறுதல்.
- காப்பியங்கள் வழி அறச் சிந்தனைகளை உணர்தல்.
- தமிழ் இலக்கண மரபினை உணர்ந்து கொள்ளுதல்.
- பழந்தமிழர்களின் வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்ளுதல்.
- பண்டைத் தமிழரின் போர் மரபு, போர் திறம் அறிதல்.
- தன்மான உணர்வு, வஞ்சின மொழியை உணர்தல்.
- பண்டைத் தமிழரின் வீர உணர்வை அறிந்துகொள்ளுதல்.